Tuesday, 28 October 2014

'பதினாறு வயதினிலே' படத்தின் மறு பதிப்பு வந்தால் அதில் 'சப்பாணி' இருக்க மாட்டான் . ஏன் ?

நேர்பட பேசுவது ஒரு புறம் இருக்கட்டும் . நம்மில் பலர் நேர் பட நடப்பதற்கு காரணமாய் இருந்த Jonas Salk அன்னாரது 100 ஆவது பிறந்தநாள் இன்று .

இன்று நீங்கள் 'Google' வலைத்தளத்திற்கு சென்றிருந்தால் 'Thank You Dr.Salk' என்னும் Doodle ஐ கண்டிருப்பீர்கள் .

யார் இந்த Jonas Salk ?






Polio தடுப்பு மருந்தை கண்டுப்பிடித்ததில் மாபெரும் பங்கு அன்னாரையே சாரும் . அதை விட அவர்கள் மனித குலத்திற்கு செய்த பெரும் பணி , அத்தடுப்பு மருந்தை காப்புரிமை என்று சொல்லப்படுகின்ற Patent Laws கீழ் அடைத்து வைக்காதது தான் . அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள பல கோடி குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை ஓரளவு இன்பமாய் கழிக்கிறார்கள் ஓடி ஆடி.


'பதினாறு வயதினிலே' படத்தின் மறு பதிப்பு வந்தால் அதில் 'சப்பாணி' இருக்க மாட்டான் . காரணம் Jonas Salk உம் அவரது கண்டுபிடிப்பும் .

இன்று Polio தடுப்பு மருந்தால் 99 சதவிகிதத்திற்கு மேல் அந்நோயின் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் . அது 100 % அடைய Polio தடுப்பு மருந்தை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரிந்துரை செய்யுங்கள் .

இன்று தடுப்பூசிகளுக்கு எதிராய் பல பதிவுகள் முகப்புத்தகத்தில் உலாவுகின்றன . அதை பதிவிடுபவர்கள் யார் என்று கேட்டால் நான் இயற்கை மருத்துவம் தெரிந்தவன் . இன்னும் தோண்டி துருவினால் ஆடு , மாடுகள் , சிட்டுக்குருவிகள் எல்லாம் என்ன தடுப்பூசியா போட்டுக்கொள்கின்றன என்று குதர்க்கமாய் கேள்வி கேட்பர் . சிலர் மதக்காரணங்களால் தடுப்பூசியை தங்கள் குழந்தைகளுக்கு போடுவது இல்லை .

நீங்கள் உலகை காப்பாற்ற ஏர் . கலப்பை எடுத்து செல்ல வேண்டியது இல்லை . உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசியை தவறாமல் போடுங்கள் .

ஒரு நோய் ஒழிக்கப்பட்டது என்று செய்தியில் சொல்லும் பொழுது அதற்கு அர்த்தம் அந்த நோய் கிருமியே உலகை விட்டு நாம் அனுப்பிவிட்டதாக அர்த்தம் இல்லை . நம்மில் பெரும்பாலோனோர்க்கு எதிர்ப்பு சக்தியை நாம் தடுப்பூசி மூலம் உருவாக்கிவிட்டதாய் அர்த்தம் .

ஆக Polio போன்ற கொடிய நோய்கள் மானுடத்தை தாக்கக்கூடாது என்றெண்ணிணால் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசியை மறக்காமல் போடுங்கள் .அப்பொழுது தான் உங்கள் குழந்தை மூலம் அந்நோய் மற்ற குழந்தைகளை தாக்குவதற்கான வாய்ப்புகள் குறையும் .


Vaccines Save Lives