Showing posts with label சோழன். Show all posts
Showing posts with label சோழன். Show all posts

Thursday, 5 October 2017

நிகண்டுகளில் 'சோழ' என்ற வார்த்தை பிரயோகம்

நிகண்டுகளில் 'சோழ' என்ற வார்த்தை பிரயோகம் நிகழும் இடங்கள்.

வட மலை நிகண்டு (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0113.html)
தொகுப்பு : ஈஸ்வர பாரதி

ககர ஓகார வருக்கம் கீழ்,

கோர மெனும்பெயர் கொடுமையும் வட்டிலும்
சோழன் குதிரையுஞ் சொல்லப் பெறுமே  ----- 608

கோழி யெனும்பெயர் சோழ னுறையூரும்
ஆண்டலைப் புள்ளு மாமென வுரைப்பர். ....614

மகர ஆகார வருக்கம்

மாலெனும் பெயர்திரு மாலொடு மதிமகன்
காரிநிற வலாரியுங் காற்றொடு சோழனும்
கண்குத்திப் பாம்பும் கருமையும் பெருமையும்
மயக்கமும் விருப்பும் கண்ணே ணியுமாகும். ....1221


சூடாமணி நிகண்டு (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0118.html)
மூலம் : மண்டல புருடர்

ரகரயெதுகை

169 (6)
ஆரமே பதக்கம் முத்தம் ஆத்தி சந்தனமே மாலை
வார நீக்கரையே யன்பு மலைச்சாரல் கிழமை பங்காம்
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை கண்ணென்ப
கோரஞ் சோழன்மா வட்டில் கொடுமை பூமொட்டு வாசி.

203 (40)
ஆரியர் மிலோச்சர் நல்லோர் ஆனென்ப யடைச்சொலாவாம்
ஆரியே கதவு சோழன் அழொடு மேன்மைக்கும் பேர்
காருகர் தந்து வாயர் கடுங்கொலையாளர் வண்ணார்
தாரகாரியென்ப காளி சண்முகந் தானுமாமே

னகரயெதுகை

298 (7)
வன்னியே பிரமசாரி வளர்கிளி சமி செந்தீயாம்
சென்னி கம் பாணன் சோழன் சீரு ளீயஞ் செம்பாகும்
கன்னி பெண் ணழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே
தென் னிசை வனப்புத் தாழை தெற்கொடு கற்பு மாமே


பிங்கலமுனிவர் செய்த பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" 
பாகம் 1 (சூத்திரங்கள் 1-1101) (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0515_01.html)

ஐந்தாவது : ஆடவர்வகை (726-1101)

747. சோழன் பெயர் - சென்னி வளவன் செம்பியன் கிள்ளி - பொன்னித் துறைவன் புலிக்கொடி யோன்மால் - கோழிவேந்த னேரி விற்ப - னாரின கண்ணிய னேரிய னபயன் - சூரியன்புனனாடன் சோழன்பெயரே (22)

748. மற்றுஞ்சோழன் பெயர் - கேசவ னென்பது மாங்கவன்மாற்றே

749. கொடிகுதிரையின் பெயர் - கொடியே வயப்புலி புரவி சோரம்

ஐந்தாவது - ஆடவர்வகை / பெயர்ப்பிரிவு

747. சோழன் பெயர் - சென்னி வளவன் செம்பியன் கிள்ளி பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால் கோழிவேந்தன் நேரிவெற்பன் ஆரின்கண்ணியன் நேரியன் அபயன் சூரியன் புனனாடன் (14)

748. மற்றுஞ்சோழன் பெயர் - கேசவன் (1) ஆக (15)

749. கொடிகுதிரையின் பெயர் - கொடி - புலி=புரவி - கோரம்

பிங்கலமுனிவர் செய்த பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" - பாகம் 3 (சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்)  (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0521_01.html

எட்டாவது - மாப்பெயர்வகை

2451. சோழன்குதிரைப்பெயர்--கோர மென்பது சோழ னூர்மா. (140)